முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      ஆன்மிகம்
Thiruvannamalai 2022 12-06

Source: provided

தி.மலை : உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

சிவனின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலமான திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா  கடந்த நவம்பர் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் நாள் தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் மிகச் சிறப்பு வாய்ந்தது பரணி தீபம். இது பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இத்திருவிழாவின் உட்பொருளை நாம் அறிய வேண்டும்.

அங்கிங்கெனாதபடி எங்கும் எல்லா உயிர்களிடத்திலும் ஜீவனாக, ஒளியாக, திகழ்ந்து இருக்கின்ற அந்தப் பரம்பொருள் ஜோதியே எல்லாவற்றிற்கும் மூலம், ஆதாரம் என்று வழங்கப்படுகிறது. இந்த தீபஜோதியை பார்க்கும்போது எல்லாவற்றிற்கும் முதற்கடவுளாக இருக்கும் அந்த பரஞ்சோதி காலை 3.30 மணி அளவில் கருவறையில் கற்பூர தீபமேற்றி அனைத்து உலகத்தையும் காப்பது அந்த ஜோதிதான் என்பது போல் சிவாச்சாரியார்கள் வேத பாராயணம் ஓத, வேதமுழக்கத்தோடு அச்சுடரை அங்கே நெய் ஊற்றப்பட்டு தயாராக மண் மடக்கிலும் ஏற்றப்படுகிறது.

அதன் பிறகு முதலில் ஏற்றப்பட்ட மடக்குடன் வெளியே கொண்டு வரப்படுகிறது. ஒரு பரம்பொருள் ஐந்து மூர்த்திகளாக விளக்குவது தான் தீபத் திருநாளன்று காலையில் கருவறையில் ஏற்றப்படும் பரணி தீபம். பஞ்சமூர்த்திகளும், பஞ்ச சக்திகளுடன் இணைந்து செயல்படுவதனைக் காட்டுவதற்காக,  அம்மன் கோயில் கருவறையில் ஐந்து அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன.

பிறகு இந்தச் சிவசக்தி மூர்த்தங்களிலிருந்து விரிவானதே எல்லா மூர்த்திகளும் என்பதனைக் காட்டுவதற்கு முதலில் விநாயகப் பெருமான் சன்னதி முதல் எல்லாச் சன்னதிகளிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இதுவே பரணி தீபத்தின் உட்பொருளாகும்.

லட்சக்கணக்கான மக்கள் கோயிலின் உள்வாளகத்தில் பரணி தீப தரிசனம் கண்டு அரோகரா, அரோகரா, அரோகரா என முழக்கமிட்டு இறைவடின வணங்கினர். இதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு கோயில் தங்கக் கொடிமரம் எதிரே சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சியளிக்க, 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இதே நேரத்தில், கோயில் கொடிமரம் எதிரே உள்ள பெரிய அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டு, பக்தி இன்னிசைக் கச்சேரி, வாணவேடிக்கைகள் நடைபெறுகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து