முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2022      விளையாட்டு
India-teams 2022 1

Source: provided

சென்னை : கடந்த 10 ஆண்டுகளில் சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சர்வதேச கிரிக்கெட் அணிகளின் வெற்றி விகிதம் குறித்த தரவு வெளியாகி உள்ளது. இதில், இந்திய அணி சொந்த மண்ணில் 80.95 சதவீத வெற்றி விகிதத்துடன் முன்னணியில் உள்ளது.

காரசார விவாதம்...

கிரிக்கெட் விளையாட்டின் அசல் வடிவம் என டெஸ்ட் கிரிக்கெட் போற்றப்பட்டு வருகிறது. ஒருநாள், டி20 மற்றும் ப்ரான்சைஸ் கிரிக்கெட் வரவுகளால் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து காரசாரமாக முன்பு விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஐசிசியின் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் அந்த விவாதங்களை தவிடு பொடியாக்கியது. அதே நேரத்தில் மற்ற வடிவ கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் அதே வரவேற்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கும் ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.

விராட் கோலி...

கடந்த 2014 வாக்கில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆனார் விராட் கோலி. அவர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டுக்கு வலு சேர்த்தது இந்த காலகட்டத்தில்தான்.

வெற்றி விகிதம்

1) வங்கதேசம் - 30.00%.

2) மேற்கிந்திய தீவுகள் - 40.00%.

3) பாகிஸ்தான் - 44.44%.

4) இலங்கை - 50.00%.

5) இங்கிலாந்து - 58.20%.

6) நியூஸிலாந்து - 63.41%.

7) தென் ஆப்பிரிக்கா - 66.66%

8) ஆஸ்திரேலியா - 70.83%.

9) இந்தியா - 80.95%.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து