முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2022      தமிழகம்
Bundi 2022 12 -09

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் அந்த ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசான முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. 

புயல் காரணமாக பெய்யும் மழையை கருத்தில் கொண்டு பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 100 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து