முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடன்பால் விமர்சனம்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2023      சினிமா
Utanpal-vimarcamam 20221 01

Source: provided

இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால் என்ற பழைய சொல்லாடலை மாற்றி இன்னைக்கு செத்தா இன்னைக்கே பால் என்கிற நிலையைச் சொல்வது தான் உடன்பால் படத்தின் கதை. சார்லி நடிப்பில் இப்போது ஆஹா ஓடிடியில் வெளியாகி இருக்கும் படம் உடன்பால்.கதை, சென்னையில் கஷ்டப்பட்டு சின்னதாக ஒரு சொந்த வீடு வைத்திருக்கிறார் சார்லி. இவருடைய மகன் லிங்கா, மருமகள் அபர்ணதி பேரன் தர்ஷித் சந்தோஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். தொழில் சரியில்லை என்பதால் அந்த வீட்டை விற்க நினைக்கிறார் லிங்கா. அதற்காக தங்கை காயத்ரியைத் துணைக்கு அழைக்க, அவரும் குடும்பத்துடன் வருகிறார். வந்திருக்கும் நேரத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கின்றன. அவை என்ன? அவற்றின் முடிவு என்ன? என்பவனவற்றை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சீனிவாசன். முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் லிங்கா, நடுத்தர வர்க்க இயலாமை, கோபம், பாசம் ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். அவர் மனைவியாக வரும் அபர்ணதியும், தங்கையாக வரும் காயத்ரியும் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.காயத்ரியின் கணவராக வரும் விவேக் பிரசன்னா அதகளம் செய்கிறார். மேலும் தணம், தீனா,  மயில்சாமி ஆகியோர் அளவாக அழகான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கதையின்  கரு சற்று நெருடலைத் தந்தாலும் சார்லியின் பேரனை மூலம் நெத்தியடியாக ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து