முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் கடும் உணவுப் பஞ்சம் : கோதுமை மாவு கிலோ ரூ. 160-க்கு விற்பனை

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2023      உலகம்
Pak 2023-01-09

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ கோதுமை மாவு ரூ. 160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

பாகிஸ்தானில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காய்கறிகள், உணவுப் பொருட்களின் விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளன. பாகிஸ்தானில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் வாங்கும் சக்தி தொடர்ந்து சுருங்கி வருகிறது. 

காய்கறிகள், இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் ரொட்டி ஆகியவற்றின் விலைகள் விண்ணைத் தொட்டுள்ளன. கடந்த ஆண்டை விட வாராந்திர உணவுப் பணவீக்கம் ஏறக்குறைய 31 சதவீதம் உயர்ந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள சென்சிட்டிவ் விலைக் குறியீடு தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானின் அத்தியாவசிய உணவான கோதுமைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் உள்ள மக்களின் முக்கிய உணவின் முக்கிய அங்கமான கோதுமை மாவின் விலை உயர்ந்துள்ளது. கராச்சியில், மாவு கிலோ ரூ. 140 முதல் ரூ. 160  வரை விற்கப்படுகிறது. 

இதனிடையே இஸ்லாமாபாத் மற்றும் பெஷாவரில் 10 கிலோ மாவு மூட்டை ரூ.1500-க்கும், 20 கிலோ மூட்டை ரூ. 2800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நெருக்கடி காரணமாக கைபர் பக்துன்க்வா, சிந்து மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் கோதுமை மாவு வாங்க பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கோதுமை மாவுக்கு நிலவும் கடும் தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தான் தற்போது நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மாவு பொட்டலங்களை அரசாங்கம் வழங்கி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து