முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளவரசி டயானாவின் ஆடை ரூ. 4.9 கோடிக்கு விற்பனை

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      உலகம்
Diana-dress 2023 01 29

Source: provided

நியூயார்க் ; சாத்பைஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்) விற்பனை ஆகியுள்ளது. எதிர்பார்த்ததைவிட 5 மடங்கு அதிக விலைக்கு டயானவின் ஆடை விற்பனையாகியுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற கலைப்பொருட்கள் சேகரிப்பு மற்றும் ஏல நிறுவனமான சாத்பைஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் வேல்ஸ் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்) விற்பனை ஆகியுள்ளது. இது நடைபெற்ற ஏலங்களில் அதிக விலைக்கு விற்பனையான ஆடை என்ற பெருமையை டயானாவின் ஆடை பெற்றுள்ளது. 

இந்த ஆடை 80 ஆயிரத்தில் இருந்து 1.2 லட்சம் டாலர் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதை விட 5 மடங்கு அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது என சாத்பைஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த உடையை இளவரசி டயானா கடந்த 1991-ம் ஆண்டு அரச குடும்ப வரைப்படத்திற்காக அணிந்தார் எனவும், அதன் பிறகு 1997-ம் ஆண்டு நடந்த போட்டோஷீட்டில் இந்த உடையை இளவரசி டயானா அணிந்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து