முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் ஆர்வம் : மான் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      இந்தியா
Modi 2023 01 23

Source: provided

புதுடெல்லி : பழங்குடி சமூகத்தினர் பலர் இந்த முறை பத்ம விருதுகளை பெற்றுள்ளனர் என்றும், தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ளனர் என்றும் பிரதமர் மோடி மான் கீ பாத் நிகழ்ச்சியில் கூறினார். 

பிரதமர் மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மான் கீ பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணிக்கு வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். 

இதனை தொடர்ந்து, 2-வது முறையாக நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மோடி பிரதமரான பின்பும் இந்த முறை தொடர்ந்து வருகிறது. அதன்படி, பிரதமர் மோடியின் வானொலி வழியேயான மான  கீ பாத் நிகழ்ச்சி நேற்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது, 

உங்களுடன் உரையாடுவது எனக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது. இந்த முறை பத்ம விருதுகளை, பழங்குடி சமூகத்தில் இருந்து வந்தவர்கள் மற்றும் பழங்குடி சமூகத்துடன் தொடர்பில் உள்ளவர்கள் அதிக அளவில் பெற்றுள்ளனர்.

பழங்குடி வாழ்க்கை, நகர வாழ்க்கையில் இருந்து வேறுபட்டது. அதற்கென்று சொந்த சவால்களை கொண்டுள்ளது. இவை எல்லாம் இருந்தபோதும், தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ளனர். பழங்குடியினரின் மொழிகளான டோடோ, ஹோ, குய், குவி மற்றும் மண்டா ஆகியவை பற்றிய பணிகளில் ஈடுபட்ட பல பெரும் பிரபலங்கள் பத்ம விருதுகளை வென்றுள்ளனர். 

அது நாம் அனைவருக்கும் பெருமைக்கு உரிய விஷயம். சித்தி, ஜார்வா மற்றும் ஓன்ஜ் ஆகிய பழங்குடியினரை பற்றிய பணிகளில் ஈடுபட்டவர்கள் இந்த முறை பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர் என அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து