முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி மோசடி வழக்கு: ராகுல் காந்தியின் நண்பரிடம் அமலாக்கத்துறை விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      இந்தியா
Rahul-friend 2023 02 05

Source: provided

புதுடெல்லி : நிதி மோசடி வழக்கு தொடர்பாக ராகுல் காந்தியின் நண்பரிடம் அமலாக்க துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகெட் கோகலே. இவர் பொதுக் கூட்டங்கள் மூலம் வசூலிக்கப்படும் நிதியில் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவரது பங்கு வர்த்தகம், விருந்து மற்றும் தனிப்பட்ட செலவுகள் எல்லாமே மிக அதிகளவில் இருந்துள்ளது.

இது தொடர்பாக குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்து,கோகலேவை டெல்லியில் கைது செய்தனர். இவரது வங்கி கணக்கில் ஓராண்டில் ரூ. 23.54 லட்சம் ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டது. இது தொடர்பாக கோகலேவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

சமூக ஊடக பணிக்காகவும் இதர ஆலோசனை சேவைகளுக்காகவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அலங்கார் சவாய் இந்தப் பணத்தை வழங்கியதாக அவர் தெரிவித்தார். அலங்கார் சவாய் என்பவர் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர்.

வாய்வழி ஒப்பந்தத்தில் இந்த பணம் வழங்கப்பட்டதாகவும் கோகலே கூறினார். இதையடுத்து அலங்கார் சவாய் அகமதாபாத் அழைத்து வரப்பட்டு, கோகலே முன்னிலையில் 3 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டது. ரொக்கமாக எந்த பணமும் செலுத்தவில்லை என சவாய் தெரிவித்துள்ளார். 

இந்த விசாரணையில் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.பொதுக்கூட்டம் நடத்தி திரட்டிய நிதியை கோகலே அளவுக்கு அதிகமாக செலவிடுதாக அகமதாபாத் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டை கோகலே மறுத்தார். இந்த வழக்கில் இன்னும் பலரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் எனத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து