முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெ. தீபாவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா : ஓ.பி.எஸ் மகன் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      தமிழகம்
Jaya-Pradeep 2023 02 05

Source: provided

சென்னை : சென்னை போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் ஜெ. தீபாவின் குழந்தைக்கு நடந்த பெயர் சூட்டும் விழாவில் ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய மகன் ஜெய பிரதீப் கலந்து கொண்டார். அப்போது ஜெ. தீபாவின் குழந்தைக்கு ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ஜெய பிரதீப் தங்க நகை அணிவித்தார். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா வைக்க திட்டமிட்ட அவர், முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வந்தார். 

இதையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு கணவர் மாதவனுடன் சென்ற தீபா, தனது மகள் பெயர் சூட்டு விழாவிற்கு வரும்படி அழைப்பிதழ் கொடுத்தார்.

அதை தொடர்ந்து சென்னை போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் ஜெ.தீபா - மாதவனின் குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வேதா இல்லத்தில் நடந்த பெயர் சூட்டும் விழாவில் ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய மகன் ஜெய பிரதீப் கலந்து கொண்டார். அப்போது ஜெ. தீபாவின் குழந்தைக்கு ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ஜெய பிரதீப் தங்க நகை அணிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து