முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் வெளியானது

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2023      இந்தியா
JEE 2023 02 07

Source: provided

புதுடெல்லி : ஜே.இ.இ. மெயின் தேர்வின் முதல் அமர்வு முடிவுகள் நேற்று வெளியானது.

2023-ம் கல்வி ஆண்டுக்கான ஜே.இ.இ. மெயின் தேர்வின் முதல் அமர்வு ஜனவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8,23,967 தேர்வர்கள் இதனை எழுதியிருந்தனர். தேசிய தேர்வு முகமை நடத்திய இந்த தேர்வு தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 14 மொழிகளில் நடைபெற்றது.

இந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்தநிலையில் ஜே.இ.இ. மெயின் தேர்வின் முதல் அமர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்வு முடிவுகளை https://jeemain.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக தெரிந்துகொள்ள முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து