முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆண்கள் ஐபிஎல் 2023: 10 அணி கேப்டன்கள் பட்டியல் வெளியீடு

வியாழக்கிழமை, 16 மார்ச் 2023      விளையாட்டு
16-Ram-54

Source: provided

புதுடெல்லி: டெல்லி அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டதையடுத்து ஐபிஎல் 2023 போட்டியில் அனைத்து அணிகளுக்குமான கேப்டன்கள் உறுதி செய்யப்பட்டுள்ளார்கள். 

இம்மாத இறுதியில்...

மார்ச் 31 அன்று தொடங்கும் ஐபிஎல் 2023 போட்டி மே 28 அன்று நிறைவுபெறுகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இறுதி ஆட்டமும் ஆமதாபாத்தில் நடைபெறவுள்ளது. சென்னை, ஆமதாபாத், மொஹலி, லக்னெள, ஹைதராபாத், பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவாஹாட்டி, தரம்சாலா ஆகிய நகரங்களில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

டேவிட் வார்னர்... 

குரூப் ஏ பிரிவில் மும்பை, கேகேஆர், ராஜஸ்தான், தில்லி, லக்னெள ஆகிய அணிகளும் குரூப் பி பிரிவில் சென்னை, சன்ரைசர்ஸ், பஞ்சாப், ஆர்சிபி, குஜராத் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸி. பேட்டர் டேவிட் வார்னர் நேற்று நியமிக்கப்பட்டார். இதையடுத்து 10 ஐபிஎல் அணிகளுக்கான கேப்டன்களின் பட்டியல் உறுதியாகியுள்ளது.

BOX - 1

அணிகளின் கேப்டன்கள்:

1) குஜராத் - பாண்டியா.

2) சிஎஸ்கே - டோனி.

3) மும்பை - ரோஹித் சர்மா.

4) சன்ரைசர்ஸ் - மார்க்ரம்.

5) டெல்லி - டேவிட் வார்னர்.

6) ஆர்சிபி - டு பிளெஸ்சிஸ்.

7) கேகேஆர் - ஷ்ரேயஸ் ஐயர்.

8) ராஜஸ்தான் - சஞ்சு சாம்சன்.

9) லக்னோ - கே.எல். ராகுல்.

19) பஞ்சாப் கிங்ஸ் - ஷிகர் தவன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து