முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மந்தைவெளி வெளிவட்ட சாலைக்கு பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் பெயர் : தமிழக அரசு அரசாணை வெளியீடு

புதன்கிழமை, 22 மார்ச் 2023      சினிமா
TMS 2023 03 22

Source: provided

சென்னை : டி.எம்.சவுந்தர ராஜனின் 100-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை மந்தைவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் வெளிவட்ட சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படுகிறது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

பிரபல பாடகரான டி.எம்.சவுந்தர ராஜன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், நாகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இவர் திரைப்பட நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுத்தமான தனித்தனி குரலில் பாடி அவர்களின் முகத்தை ரசிகர்களின் கண்முன் நிறுத்தும் திறமை கொண்டவர். 

இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் படங்களுக்கும் பாடல்கள் பாடியுள்ளார். பத்ம ஸ்ரீ விருது பெற்ற இவர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் 2500-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் கடந்த 2013-ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். 

இந்நிலையில், டி.எம்.சவுந்தர ராஜனின் 100-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை மந்தைவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் வெளிவட்ட சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படுகிறது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

வரும் 24-ம் தேதி அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து