முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய சீனியர் எறிப்பந்து: தமிழக அணிகள் அறிவிப்பு

புதன்கிழமை, 22 மார்ச் 2023      விளையாட்டு
Handball 2023 03 22

Source: provided

44-வது தேசிய சீனியர் எறிப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பீகாரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான் தமிழக அணிகளை தமிழ்நாடு எறிப்பந்து சங்கத் தலைவர் டி.பாலவிநாயகம் அறிவித்துள்ளார். 

தமிழக அணி வருமாறு:- பெண்கள்:-பியூலா ஜாய்ஸ், கிருத்திகா, சுஜிதா, வர்ஷினி, நேத்ரா, ஜீவிகா, மனோன்மணி, கனிஷ்கா, வினோதினி, கிறிஸ்லின், லாவண்யா, ஹேமா ஜெயஸ்ரீ, சுவாதி, சபரீ ஸ்வரி, சுபஸ்ரீ, மணிமேகலை. ஆண்கள்:-இசக்கி துரை, ஸ்ரீதரன், சுபாஷ், தீபக்குமார், கோகுல், திவா கர், லோகேஷ்வரன், சஞ்சய், ரூபன்ராஜ், பிரதீப்குமார், லட்சுமிகாந்த், லோக பிரீத்தம், ராய்சன், சூர்யா, நிஷாந்த்குமார், கிரீஷ்.t

________________

சூர்யகுமார் விஷயத்தில் பொறுமை அவசியம் - பயிற்சியாளர் டிராவிட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியையொட்டி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது., அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நடக்கிறது. அதற்கு முன்பாக உள்ளூரில் இந்த சீசனில் 9 ஒரு நாள் போட்டிகளில் விளையாட வேண்டி இருந்தது. அதில் 8 ஆட்டங்களில் விளையாடி விட்டோம். இன்றைய ஆட்டம் முடிந்ததும் நிறைய விஷயங்களில் எங்களுக்கு தெளிவு கிடைக்கும். அதை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டியது முக்கியம்.

உலகக் கோப்பை மிகப்பெரிய போட்டி. இந்தியாவில் 9 நகரங்களில் நடக்கிறது. துரதிர்ஷ்டவசமாக ஸ்ரேயாஸ் அய்யர் காயத்தால் இந்த தொடரில் விளையாட முடியாமல் போய் விட்டது. அனேகமாக 4-வது வரிசையில் அவருக்கு தான் அண்மை காலமாக அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்டது. இப்போது அவர் இல்லாததால் சூர்யகுமார் அந்த வரிசையில் ஆடுகிறார். முதல் இரு ஆட்டங்களிலும் சூர்யகுமார் 'டக்-அவுட்' ஆனாலும் உண்மையில் அவரது பார்ம் குறித்து கவலைப்படவில்லை. எனவே அவருக்கு போதுமான வாய்ப்புகளை வழங்கி பொறுமை காக்க வேண்டியது அவசியம். இவ்வாறு டிராவிட் கூறினார்.

________________

ஐ.பி.எல். 2023 போட்டிகளின் வர்ணனையாளர்கள் யார், யார்?

ஐபிஎல் 2023 சீசன் போட்டிகள் வரும் 31-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. மொத்தம் 74 போட்டிகள். 10 அணிகள் இதில் பங்கேற்கின்றன. அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானம் மற்றும் பிற அணிகளின் மைதானத்தில் இந்த சீசனில் விளையாடுகின்றன. சென்னை - சேப்பாக்கம் மைதானத்திலும் போட்டிகள் நடைபெறுகின்றன.

ஆங்கில வர்ணனையாளர்கள்: சுனில் கவாஸ்கர், ஜேக் கல்லில், மேத்யூ ஹேடன், கெவின் பீட்டர்சன், ஆரோன் ஃபின்ச், டாம் மூடி, பால் காலிங்வுட், டேனியல் வெட்டோரி, டேனியல் மாரிசன், டேவிட் ஹஸ்ஸி. தமிழ் வர்ணனையாளர்கள்: கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், பத்ரிநாத், லக்‌ஷ்மிபதி பாலாஜி, சடகோபன் ரமேஷ், முரளி விஜய், ஆர்ஜே பாலாஜி, யோமகேஷ், முத்துராமன், கே.வி சத்தியநாராயணன், திருஷ் காமினி ஆகியோர் வர்ணனையாளர்களாக செயல்பட உள்ளனர். மலையாள மொழியில் ஸ்ரீசாந்த் போட்டிகளை வர்ணனை செய்கிறார். இந்தியில் சேவாக், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், யூசுப் பதான், மிதாலி ராஜ் ஆகியோர் வர்ணனையாளர்களாக செயல்பட உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து