முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை காலிறுதியில் ஆஸி.யை காலி செய்த இந்தியா

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2023      விளையாட்டு
Yuvraj-Raina 2023 03 24

Source: provided

கடந்த 2011-ல் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியை காலிறுதியில் வீழ்த்தி அரையிறுதி, இறுதி என கோப்பையை வென்று அசத்தி இருந்தது. அந்தப் போட்டி மார்ச் 24-ல் (நேற்றைய தினம்) நடைபெற்றது. இந்திய அணியின் வெற்றியில் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா என இருவரும் பிரதான பங்கு வகித்தனர். 

ஆட்டத்தில் அழுத்தம் நிறைந்த நேரத்தில் அபாரமாக பேட் செய்து அசத்தினர். இந்த வெற்றி ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாத ஒரு அனுபவம். ஏனெனில் 1999, 2003, 2007 என தொடர்ச்சியாக மூன்று உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்திருந்தது ஆஸ்திரேலிய அணி. அகமதாபாத் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் அந்த அணி களம் கண்டிருந்தது. 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்திருந்தது ஆஸி. 

________________

சென்னை சூப்பர் கிங்சுடன் இணைந்த பென் ஸ்டோக்ஸ்

வரும் 31-ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் விளையாடுகின்றன. இதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது சென்னையில் முகாமிட்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் அணியுடன் இணைந்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கி இருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இவர் முக்கிய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மேட்ச் வின்னர். அதற்கு உதாரணம் 2019 ஒருநாள் மற்றும் 2022 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியை சொல்லலாம். அதுமட்டுமல்லாது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணியின் கேப்டன் இவர்.

________________

அப்ரிடியால்தான் உயிருடன் இருக்கிறேன்: இம்ரான் நசீர் 

பாகிஸ்தான் 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்தது. இதில் அந்த அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் ஓட்டல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அதன் மர்மங்களே இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் இம்ரான் நசீர் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் பாகிஸ்தான் இம்ரான் நசீர் தான் கிரிக்கெட் திறனில் சிறந்த நிலையில் இருந்த போது தனக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கபட்டதாகவும். அதில் இருந்து ஷாகித் அப்ரிடிதான் தன்னை காப்பாற்றினார் என கூறி உள்ளார். 

நாதிர் அலி போட்காஸ்டில் இம்ரான் நசீர் கூறி இருப்பதாவது:-சமீபத்தில் என்னுடைய மருத்துவ அறிக்கையில் எனக்கு விஷம் கொடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. மெர்குரி திரவத்தை என்னுடைய உணவில் யாரோ சேர்த்து இருக்கிறார்கள். இது ஒரு மெல்ல கொல்லும் விஷம். அது உங்கள் மூட்டை அடைந்து அவற்றை சேதப்படுத்துகிறது. 8-10 ஆண்டுகளாக, எனது அனைத்து மூட்டுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அண்ணன் அப்ரிடிக்கு நான் எப்படி கைமாறு செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. என கூறி உள்ளார்.

________________

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து வெளியேற்றம்

சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.சி.சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். அவர் 2-வது சுற்றில் இந்தோனேசியாவின் புத்ரி குசுமாவர்தானியிடம் 15-21, 21-12, 18-21 என்ற செட் கணக்கில் தோற்றார். ஏற்கனவே இந்தியாவின் ஸ்ரீகாந்த், பிரனாய், மிதுன், மஞ்சுநாத் ஆகியோர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தோற்றனர். இதன் மூலம் சுவிஸ் ஓபன்பேட்மின்டனில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராஜ் ஜோடி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. தைவானின் பாங்சிக்லீ-ஜென் லீ ஜோடியை 12-21, 21-17, 28-26 என்ற கணக்கில் கடுமையாக போராடி வென்று கால் இறுதிக்கு இந்திய ஜோடி முன்னேறியது. சாத்விக்-சிராஜ் ஜோடி கால் இறுதியில் டென்மார்க்கின் ஜெப்பே பே-லாஸ்சே மோல் ஹெடே ஜோடியுடன் மோதுகிறது.

________________

நியூசிலாந்து - இலங்கை மோதும் முதல் ஒருநாள் இன்று துவக்கம்

இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது. 

இதில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இந்திய நேரப்படி நாளை (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. நியூசிலாந்து அணி டாம் லாதம் தலைமையிலும், இலங்கை அணி தசுன் ஷனகா தலைமையிலும் களம் காணுகிறது. டெஸ்ட் போட்டியில் அசத்திய நியூசிலாந்து அணி அந்த ஆதிக்கத்தை ஒருநாள் தொடரிலும் நீட்டிக்க முயற்சிக்கும். அதேநேரத்தில் டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுக்க இலங்கை அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த போட்டி பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 12 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து