முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பிரனாய் இறுதிப்போட்டிக்கு தகுதி

சனிக்கிழமை, 27 மே 2023      விளையாட்டு
Pranay 2023-05-26

Source: provided

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரனாய் , இந்தோனேஷியாவின் கிறிஸ்டியன் அடினாடாவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 21-19 என்ற கணக்கில் முதல் சுற்றை பிரனாய் கைப்பற்றினார். பின்னர் காயம் காரணமாக கிறிஸ்டியன் அடினாடா போட்டியிலிருந்து விலகினார்.இதனால் இந்தியாவின் பிரனாய் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து , இந்தியாவின் இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கை எதிர்கொண்டார் இந்த ஆட்டத்தில் 14 -21 , 17 -21 என்ற கணக்கில் பி.வி. சிந்து தோல்வி அடைந்தார். 

_________________

பயோபிக்காக உருவாகிறது சவுரவ் கங்குலியின் வாழ்க்கை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கைப் பயணம் திரைப்படமாக உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியின் கேப்டன்கள் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி. 1996ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி அடுத்தடுத்து இரு சதங்களை அடித்து கவனத்தை ஈர்த்தவர்.

கடந்த 2021ஆம் ஆண்டு தனது வாழ்க்கைப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு பயோபிக் திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாக கங்குலி தெரிவித்திருந்தார். அது வெறும் அறிவிப்போடு மட்டுமே நின்றுவிட்டது. அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், கங்குலியின் பயோபிக் படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்க முன்வந்துள்ளார். சமீபத்தில் கங்குலியை நேரில் சந்தித்து இதுகுறித்து அவர் பேசியதாக தெரிகிறது.

__________ ______

டி-20 போட்டியில் அதிவேக சதம்: வரலாறு படைத்தார் ஆஸி. வீரர் 

இங்கிலாந்தில் நடைபெறும் டி20 பிளாஸ்ட் தொடரில் சர்ரே அணிக்கு ஆடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்/ஆல்ரவுண்டர் ஷான் அபாட் நேற்று (சனிக்கிழமை) 34 பந்துகளில் சதம் விளாசி புதிய டி20 வரலாறு படைத்துள்ளார். இந்த டி20 தொடரின் வரலாற்றில் 34 பந்துகளில் சதம் கண்ட 2வது வீரர் ஆனார் சான் அபாட்.

சர்ரே அணி ஒரு கட்டத்தில் 66/4 என்று தத்தளித்துக் கொண்டிருந்த போது ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷான் அபாட் இறங்கினார். மைதானம் முழுதும் பந்துகள் பறந்தன 11 சிக்சர்களை பறக்க விட்டார். 44 பந்துகளில் 110 நாட் அவுட் என்று வரலாற்று நாயகனாகத் திரும்பினார். சர்ரே அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ஓவர்களில் 223 ரன்கள் விளாசியுள்ளது.

________________

சேவாக் சாதனையை முறியடித்த சுப்மன் கில்

நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடந்த குவாலிபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சுப்மன் கில் 129 ரன்கள் குவித்தார். 

இந்த ஆட்டத்தில் 129 ரன் எடுத்ததன் மூலம் 'பிளேஆப் சுற்றின் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரேந்தர் சேவாக் சாதனையை சுப்மன் கில் முறியடித்தார். 2014 ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான 'குவாலிபையர்-2' ஆட்டத்தில் வீரேந்தர் சேவாக் 122 ரன் எடுத்தார். தற்போது சுப்மன் கில் அவரை கடந்தார். மேலும் ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிகமான ரன் எடுத்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து