முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி செய்தது தவறு: சொல்கிறார் ரிக்கி பாண்டிங்

வியாழக்கிழமை, 8 ஜூன் 2023      விளையாட்டு
8-RAm-58-1

Source: provided

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் பிரதான சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.

“என்னை பொறுத்தவரையில் இந்திய அணி இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸிற்கான பவுலிங் அட்டாக்கை மட்டுமே கொண்டுள்ளது. இது மிகப்பெரிய தவறாகும். ஆஸ்திரேலிய அணியில் அதிகம் இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஜடேஜாவை காட்டிலும் அஸ்வின் அவர்களுக்கு இம்சை கொடுப்பார். ஆடுகளத்தில் புற்கள் உள்ளது. அதை நானும் பார்த்தேன். ஆனால், அதற்கு கீழ் பகுதி வறண்டு காணப்படுகிறது. அது எனக்கு தெளிவாக தெரிந்தது” என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

________________

சிங்கப்பூர் பாட்மிண்டன்:

இந்திய ஜோடி தோல்வி

சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி முதல் சுற்றில் தோல்வி அடைந்தது. சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, ஜப்பானின் அகிரா கோகா தைச்சி சைட்டோ ஜோடியை எதிர்த்து விளையாடியது. ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக் சாய் ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 18-21, 21-14, 18-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது.

________________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து