முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா நிலவை அடைந்து விட்டது: நிதிக்கு கையேந்தி கொண்டிருக்கிறது : பாகிஸ்தான்: நவாஸ் ஷெரீப் விமர்சனம்

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2023      உலகம்
Nawaz-Sharif 2023-09-19

Source: provided

லாகூர் : இந்தியா நிலவை அடைந்து விட்ட சூழலில், உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கையேந்திக் கொண்டிருக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

லாகூரில் நடைபெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

இந்தியா நிலவை அடைந்து விட்டது. ஜி-20 கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், பாகிஸ்தான் பிரதமர் நாடு, நாடாகச் சென்று நிதிக்காக கையேந்திக் கொண்டிருக்கிறார்.  இந்தியா செய்த சாதனைகளைப் பாகிஸ்தானால் ஏன் செய்ய முடியவில்லை. இதற்கெல்லாம் இங்கு யார் பொறுப்பு  என்று பேசினார். 

கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு ஷெபாஷ் ஷெரீப் பிரதமராக பதவியேற்ற பின்னும், சீரான பொருளாதார நிலையை பாகிஸ்தானால் எட்ட முடியவில்லை. இதன் தொடர்ச்சியாகவே நவாஸ் ஷெரீப் கடுமையான விமர்சனங்களை ஷெபாஷ் ஷெரீப் அரசின்மீது முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

2019-ல் அல்அஜிசியா மில் ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தற்போது மருத்துவ காரணங்களுக்காக லண்டனில் இருக்கும் நவாஸ் ஷெரீப் வரும் அக்டோபர் 21-ம் தேதி நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் நவம்பர் 6-ம் தேதியை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நாடு திரும்புவதாக நவாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து