முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் : இந்தியாவுக்கு ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2023      உலகம்
Justin-Trudeau 2023-09-22

Source: provided

நியூயார்க் : காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் நீதி வழங்குவதற்கு கனடாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்தியாவுக்கு ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

இந்த விஷயத்தை (நிஜ்ஜர் கொலை) இந்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் முழு வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்தவும், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்தவும் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என கூறினார். 

இந்தியாவின் விசா ரத்து நடவடிக்கை குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது, நாம் சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடு. கனடா நாட்டு குடிமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், நமது மதிப்புகள் மற்றும் சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை நிலைநிறுத்தவும் தேவையான பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்வோம். இப்போது எங்கள் கவனம் அதுதான் என்றும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து