முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய உச்சம்: 3 மாதங்களில் 90,000 மாணவர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்க அரசு

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      இந்தியா
Visa 2023 04 30

Source: provided

புதுடெல்லி : முன்னெப்போதும் இல்லாத அளவாக கடந்த 3 மாதங்களில் 90 ஆயிரம் மாணவர்களுக்கு விசா அளித்துள்ளதாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, 

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் இந்திய மாணவர்கள் 90 ஆயிரம் பேருக்கு நாங்கள் விசா அளித்துள்ளோம். இந்திய - அமெரிக்க கல்வி பரிமாற்றத்தில் இது முன் எப்போதும் இல்லாத ஓர் உயர்வு. 

அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் நான்கில் ஒருவர் இந்திய மாணவர். கல்வி சார்ந்த தங்கள் இலக்குகளை அடைய அமெரிக்காவை தேர்வு செய்த மாணவர்களுக்கு நாங்கள் எங்கள் மனமார்ந்த நல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். 

குழுவாக இயங்கியதன் மூலமும், புதுமைகளை புகுத்தியதன் மூலமும், தகுதி வாய்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் கல்வியை அமெரிக்காவில் உரிய நேரத்தில் கற்கத் தொடங்குவதை உறுதிப்படுத்த எங்களால் முடிந்திருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து