முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு யுஸ்வேந்திர சாஹல் புகழாரம்

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      விளையாட்டு
Sahal 2023-09-25

Source: provided

இந்தூர். : இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் 105 ரன்களும், சுப்மன் கில் 104 ரன்களும், சூர்யகுமார் 72 ரன்களும், கேஎல் ராகுல் 52 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 28.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் (டி.எல்.எஸ் முறை) இந்திய அணி அபார வெற்றிபெற்று, 2-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு யுஸ்வேந்திர சாஹல் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில், "அஸ்வின் என்ற அந்த பெயரே போதும்" என்று அதில் யுஸ்வேந்திர சாஹல் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து