முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து நதிகளையும் இணைப்பதே காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு : தஞ்சாவூரில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      தமிழகம்
Pramalatha 2023-07-24

Source: provided

தஞ்சாவூர் : காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமானால், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

காவிரி நீரைத் திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகில் தே.மு.தி.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தைத் தொடங்கி வைத்த தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும் பிரிந்து 2 நாட்கள்தான் ஆவதால், இதனை பொறுத்திருந்து பார்ப்போம். அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது, நிரந்தர நண்பரும் கிடையாது. அந்த இரு கட்சிகளுக்கும் இடையே பிரச்சனை கிடையாது. இரு தலைவர்கள் இடையேதான் பிரச்சனை.  கூட்டணி தொடர்பான விஷயத்தில் தே.மு.தி.க. உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுக்கும்.

காவிரி பிரச்சினை 50 ஆண்டுகளாக நிலவி வருகின்றது. ஆனால், இதுவரை எந்தத் தீர்வு கிடைக்கவில்லை. இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணத் தமிழக முதல்வரும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் அனைத்து கட்சித் தலைவர்களையும் அழைத்துச் சென்று, பிரதமரை சந்திக்க வைத்து காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும். காவிரி பிரச்சினை தொடர்பாகத் தமிழக ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவுள்ளோம். காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமானால், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து