முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தி ஜெயந்தி: சென்னையில் உருவப்படத்திற்கு கவர்னர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      தமிழகம்
CM-1 2023-10-02

Source: provided

சென்னை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நாடு முழுவதும் காந்தியடிகளின் 155-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் சார்பில், சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ. வேலு, ராஜ கண்ணப்பன், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், மகாத்மா காந்தியின் புகழைப் போற்றும் வகையில், அமைந்த பஜனைப் பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை தமிழக கவர்னரும், முதல்வர் மு.க. ஸ்டாலினும் அமர்ந்து கேட்டனர்.

மேலும் காந்தி ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில், அவரது சிலைக்கும், உருவப்படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், காந்தி ஜெயந்தி நாளான நேற்று தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டங்களும் நடைபெற்றன. 

 இந்த நிலையில் காந்தியின் பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

அரையாடை அணிந்து ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வென்ற போராளி. வெறுப்புணர்வுக்கு எதிராக ஒற்றை மனிதராக நின்று சமூகத்தில் அமைதி மலரப் பாடுபட்டவர்.  அவரது வாழ்வின் பொருளை உணர்த்தவே, இந்த நாட்டிற்கே காந்தி தேசம் எனப் பெயரிட வேண்டும் எனத் தந்தை பெரியார் வலியுறுத்தினார். 

அண்ணல் என்றும் மகாத்மா என்றும் இந்த நாடும் பாரும் போற்றும் நமது தேசத் தந்தை காந்தியாரின் பிறந்தநாளில், அவர் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரது இலட்சியப் பாதையில் வெறுப்புணர்வை ஒழித்து, எல்லார்க்கும் எல்லாம் என்ற இந்தியாவைக் கட்டமைப்போம். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து