முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணவனின் ஆதார் தகவல்களை மனைவி பெற முடியாது : கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      இந்தியா
Kolkata-High-Court 2023 04

Source: provided

பெங்களூரு : கணவனின் ஆதார் தகவல்களை தனிப்பட்ட முறையில் மனைவி பெற முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவின் ஹூப்பள்ளியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 2005 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அந்த ஜோடிக்கு பெண் குழந்தை உள்ள நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இது தொடர்பாக அந்த பெண் தொடர்ந்த வழக்கில், பாராமரிப்பு தொகையாக அவருக்கு ரூ.10,000 மற்றும் அவரின் மகளுக்கு ரூ.5,000 மாதந்தோறும் வழங்க கணவனுக்கு குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் தான், அந்த பெண் மீண்டும் ஒரு வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தனது கணவர் இருக்கும் இடம் தெரியவில்லை என்றும், அவர் எங்கோ தப்பியோடிவிட்டதால் தங்களால் நீதிமன்ற உத்தரவின்படி பாராமரிப்பு தொகை பெற முடியவில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். இதனால், தனது கணவரின் ஆதார் தகவல்கள், அவர் எங்கு உள்ளார், அவரது செல்போன் விவரங்கள் உள்ளிட்டவற்றை தனக்கு அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த பெண் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கணவரின் ஒப்புதலுடன் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் அவரின் தகவலை பெற்று மனுதாரருக்கு தர ஆதார் அமைப்புக்கு உத்தரவிட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த அந்த பெண், திருமணம் உறவு தங்களுக்குள் இருப்பதால், கணவரின் அனுமதியின்றி அவரின் தகவல்களை பெற தனக்கு முழு உரிமை உள்ளதாக வாதிட்டார். இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், திருமணம் என்ற ஒப்பந்தத்தின் மூலம் தனிநபரின் உரிமைகளை பறிக்க முடியாது என்று கருத்து தெரிவித்தனர். இதனால், கணவனின் அனுமதியின்றி அவரின் தகவல்களை மனைவியால் பெற முடியாது என்று கூறி  மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து