முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி ராமர் கோவிலுக்கு கொண்டு செல்ல தாமிரபரணி புனிதநீர் சேகரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      தமிழகம்
Nellai 2023-12-03

Source: provided

நெல்லை : அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக திருநெல்வேலி தாமிரபரணியில் இருந்து புனிதநீர் சேகரிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள பல்வேறு நதிகளில் இருந்து புனிதநீர் சேகரித்து கொண்டு செல்லப்படுகிறது.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் தென்பொதிகையில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் இருந்து புனிதநீர் சேகரித்து கொண்டு செல்லப்படுகிறது. இதையொட்டி திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரம் தாமிரபரணி தீர்த்தக் கட்டத்தில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தாமிரபரணி நதியில் பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட சிறப்பு பூஜை பொருள்கள் கலந்து வழிபாடு செய்யப்பட்டது. மகா தீபாராதனைக்குப் பின்பு ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்துடன் புனிதநீர் சேகரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து