முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'சந்திரயான்-3' விண்கலத்தின் உந்துவிசை தொகுதி மாற்றம் : இஸ்ரோ தகவல்

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      இந்தியா
ISRO 2023-08-25

Source: provided

பெங்களூரு : சந்திரயான்-3 விண்கலத்தின் 'உந்துவிசை தொகுதி' பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 'சந்திரயான்-3' விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த ஜூலை 14-ந்தேதி விண்ணில் ஏவியது. தொடர்ந்து ஆகஸ்ட் 23-ந்தேதி 'விக்ரம்' லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகே வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து 'பிரக்யான்' ரோவர் மூலம் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் சந்திரயான்-3 விண்கலத்தின் 'புரபல்ஷன் மாட்யூல்' எனப்படும் உந்துவிசை தொகுதி, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து பூமியின் சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதை ஒரு தனித்துவமான சோதனை என இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தொகுதியை நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு கொண்டு சென்று லேண்டரை வெற்றிகரமாக பிரிப்பதே உந்துவிசை தொகுதியின் முக்கிய நோக்கமாகும். இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தின் இலக்குகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், உந்துவிசை தொகுதியை பயன்படுத்தி எதிர்கால நிலவு பயணங்களுக்கான தகவல்களைப் பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து