முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக்ஜம் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகை

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      இந்தியா
Chennai 2023 08 14

Source: provided

சென்னை : மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு திங்கள்கிழமை தமிழகம் வருகிறது. 

‘மிக்ஜம்’ புயல் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்படும் புறநகர் பகுதியைப் போலவே, இம் முறை நகரின் மையப் பகுதிகளும் சிக்கிக் கொண்டதால் தண்ணீரில் சிக்கிய அனைவரையும் உடனடியாக மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதன் விளைவாக மாநிலம் முழுவதுமிருந்து அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அதேபோல வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்க கூடுதலான படகுகளும், தாழ்வான பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற ராட்சத மின் மோட்டார்களும் வரவழைக்கப்பட்டன. 

தொடர்ச்சியாக நடந்த மீட்புப் பணியின் காரணமாக, பல்வேறு பகுதிகளில் தேங்கியிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மேலும் இரு நாள்களாக துண்டிக்கப்பட்டிருந்த மின் விநியோகமும் சீராக்கப்பட்டது. ரயில்கள், பேருந்துகளின் இயல்பான தினசரி சேவையை வியாழக்கிழமை தொடங்கியது. மழைநீர் தேக்கத்தால் பல இடங்களில் மூடப்பட்டிருந்த பெட்ரோல் விற்பனை நிலையங்கள் பெரும்பாலானவை திறக்கப்பட்டன.

இந்த நிலையில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு திங்கள்கிழமை (நாளை) தமிழகம் வருகிறது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 2 நாட்கள் மத்திய குழு ஆய்வு மேற்கொள்கிறது. பின்னர் தலைமைச் செயலகத்தில் தலைமைச்செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு மத்தியக்குழு தில்லி செல்கிறது.  முன்னதாக ‘மிக்ஜம்’புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிச.7ஆம் தேதியும், மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்றும் தமிழகம் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து