முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்டை நாடுகள் குறித்து நவாஸ் ஷரீப் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      உலகம்
Nawaz-Sharif 2023-12-10

Source: provided

இஸ்லாமாபாத் : எனது ஆட்சி காலத்தில்தான் இந்திய பிரதமர்களான வாஜ்பாய்(1999), நரேந்திர மோடி(2015) ஆகியோர் பாகிஸ்தானுக்கு வருகை தந்தனர் என அண்டை நாடுகள் குறித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில், வரும் 2024 பிப்ரவரி 8 அன்று அந்நாட்டு பாராளுமன்றத்தின் 336 இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக பதவி வகித்தவர் முகமது நவாஸ் ஷரீப் (73). மூன்று முறையும் இவர் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும் முன்பே பல்வேறு காரணங்களால் ஆட்சியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக உள்ள நவாஸ் ஷரீப், அடுத்த வருட தேர்தலில் வென்று மீண்டும் பிரதமராக தீவிரமாக களமிறங்கி உள்ளார். இந்நிலையில், அண்டை நாடுகள் குறித்து அவர் தெரிவித்ததாவது:

1999-ல் இந்தியாவிற்கு எதிராக ஜெனரல் முஷாரப் கார்கில் பகுதியில் ஊடுருவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை நான் எதிர்த்தேன். அதனால் நான் பதவி விலகும் நிலை ஏற்பட்டது. இந்தியாவுடன் நேர்மறையான உறவு வேண்டும் என விரும்புபவன் நான். 

3 முறை பிரதமராக இருந்த போதும், நியாயமற்ற காரணங்களுக்காக பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டேன். எனது ஆட்சி காலத்தில்தான் இந்திய பிரதமர்களான வாஜ்பாய்(1999), நரேந்திர மோடி(2015) ஆகியோர் பாகிஸ்தானுக்கு வருகை தந்தனர். அதற்கு முன்னர் இந்தியாவிலிருந்து எந்த அதிபரும் பாகிஸ்தானுக்கு வருகை தந்ததில்லை.

அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது வருத்தம் அளிக்கிறது. அண்டை நாடுகள் எங்களுடன் வருத்தத்தில் இருந்தால் உலக அளவில் மதிப்புமிக்க நாடாக நாங்கள் எப்படி மாற முடியும்? நாங்கள் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுடன் சுமூக உறவு நிலவுவதையே விரும்புகிறோம்.இவ்வாறு நவாஸ் ஷரீப் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 6 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 2 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து