முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷரியத் அடிப்படை சட்டங்களை ரத்து செய்த மலேசிய சுப்ரீம் கோர்ட்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2024      உலகம்
Malaysia 2023 08 11

Source: provided

கோலாலம்பூர் : இஸ்லாமிய மதச் சட்டமான ஷரியத்தை அடிப்படையாகக் கொண்டு மலேசியாவின் கெலன்டான் மாகாண அரசு இயற்றிய 16 சட்டங்களை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செல்லாதவையாக அறிவித்துள்ளது.

மத்தியில் எதிா்க்கட்சியாக இருந்து வரும் பெரிக்காத்தான் கட்சி, கெலன்டான் மாகாணத்தில் ஆட்சி செலுத்தி வருகிறது. அந்த மாகாண அரசு, பாலியல் குற்றங்கள், பாலினம் மாறி உடை அணிதல், போலி சாட்சியம் அளித்தல் போன்ற பல்வேறு குற்றங்களுக்கு ஷரியா அடிப்படையில் தண்டனை வழங்கும் புதிய சட்டங்களை இயற்றியது.

கடந்த 2020-ல், மலேசியாவின் வடகிழக்கில் உள்ள கெலன்டான் பகுதியிலிருந்து 2 இஸ்லாமிய பெண்கள், ஷரியத் அடிப்படையில் உருவாகியிருந்த சில சட்டங்களுக்கும், அவற்றிற்கான தண்டனைகளுக்கும் எதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இவ்வழக்கில், கடந்த இரு தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் ஷரியத் அடிப்படையில் இருந்த கிரிமினல் சட்டங்களை நீக்கி விட்டது. இது தொடர்பான விசாரணையில் 9 பேர் கொண்ட பெஞ்ச் அளித்த தீர்ப்பில், 8-1 எனும் எண்ணிக்கையில், ஷரியத் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த 16 சட்டங்களை நீக்கி விட்டது.

இவற்றில் சில பாலியல் குற்றங்கள், குடும்ப உறவுகளுக்குள் நடைபெறும் பாலியல் தாக்குதல்கள்,  பொய் சாட்சி கூறுதல், மத வழிபாட்டு தலங்களை அவமதித்தல் உள்ளிட்ட பல குற்றங்களுக்கான சட்டங்கள் அடங்கும்.மலேசியாவின் மத்திய சட்டத்தில் இவை முன்னரே அடங்கும் என்பதால், தனியாக ஷரியத் சட்டத்தின்படி இவை தேவையில்லை என தீர்ப்பாகி உள்ளது.

மலேசியாவில் இரட்டை சட்ட முறை கடைபிடிக்கப்படுகிறது. தனி நபர் மற்றும் குடும்பங்கள் சார்ந்த சிக்கல்களுக்கு ஷரியத் சட்டமும், பிற விஷயங்களுக்கு பொது சட்டமும் உள்ளது. 

மலேசியாவின் 33 மில்லியன் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பூர்வீக மலேய மக்கள். இவர்கள் இஸ்லாமியர்களாகவும், இவர்களை தவிர சீனர்களும், இந்தியர்களும் மக்கள் தொகையில் உள்ளனர்.

தனது மகளுடன் இணைந்து இவ்வழக்கை தாக்கல் செய்த நிக் எலின் நிக் அப்துல் ரஷீத் எனும் வழக்கறிஞர், மலேசிய அரசியலமைப்பு சட்டம்தான் உயர்ந்தது என இத்தீர்ப்பில் தெளிவாகி உள்ளது என தெரிவித்தார். 

இந்த நிலையில் 2022 பொது தேர்தலில் வென்ற பிரதமர் அன்வர் இப்ராகிம், இந்த தீர்ப்பினால் அரசியல் ரீதியாக விளையும் மாற்றங்களை சந்திப்பது சவாலாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து