முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்கட்சி தலைவராக பதவியேற்று 100-வது நாள்: ராகுல் காந்திக்கு காங். தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2024      தமிழகம்
Selvabaru 2023-02-19

Source: provided

சென்னை : நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்று 100-வது நாளை எட்டியுள்ள நிலையில் ராகுல் காந்திக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவராக இந்திய மக்களின் குரலாக ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை பார்த்து நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அவர் பொறுப்பேற்றது முதற்கொண்டு மக்களை பாதிக்கிற பல்வேறு பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி ஆளுங்கட்சியின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக வெறுப்பு அரசியலின் மூலம் நூற்றுக்கணக்கானவர்களை பலி கொண்டு வன்முறை பூமியாக மாற்றப்பட்ட மணிப்பூருக்கு கடந்த ஜூலை மாதம் 3-வது முறையாக நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரை துடைத்து நிவாரண பொருட்களை வழங்கி நம்பிக்கை ஏற்படுத்தினார். 

மத்திய அரசுத்துறைகளில் உயர் பதவிகளில் 45 காலியிடங்களுக்கு நேரடி நியமனம் முறையில் தேர்வு செய்ய மத்திய அரசின் அமைப்பான மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்புக்கும், நியமனத்திற்கும் எதிராக கண்டனக் குரல் எழுப்பி, அதை நடைமுறைக்கு கொண்டு வராமல் தடுத்தார்.

அதேபோல, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறாமல் தடுத்து நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பதற்கு பெரும் துணையாக இருந்தார். 

நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவராக ராகுல்காந்தி 100 நாட்களில் சிறப்பாக பணியாற்றி மோடி ஆட்சியில் நடைபெறும் ஜனநாயக விரோத, பாசிச, பிற்போக்கு நடவடிக்கைகளை முறியடித்து தொடர்ந்து வெற்றிகளை குவிக்க வேண்டுமென தலைவர் ராகுல்காந்திக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் 100-வது நாளில் மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து