முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறதியால் தலைவர்களின் பெயர்களை அடிக்கடி மாற்றி உச்சரிக்கும் அமெரிக்க அதிபர் பைடன்

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2024      உலகம்
Joe-Biden-2023-04-27

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிருபர்கள் எழுப்பிய ஒரு கேள்விக்கு எகிப்திய தலைவர் அப்துல் பைத்தாக் எல்.சி.சி.யை தவறுதலாக மெக்சிகோவின் ஜனாதிபதி என்று குறிப்பிட்டது  சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களுக்கு அளித்தார். அப்போது காசாவின் மனிதாபிமான நிலைமை பற்றி அவரிடம் நிருபர்கள் ஒரு கேள்வியை முன் வைத்தனர். 

அப்போது ஜோ பைடன் மனிதாபிமானப் பொருட்களுக்கான நுழைவாயிலைத் திறக்க மெக்சிகோவின் ஜனாதிபதி அப்துல் பைத்தாக் எல்.சி.சி.யுடன் பேசினேன். நான் அவரை வாயிலைத் திறக்கச் சொன்னேன் என்று கூறினார்.

எகிப்திய தலைவர் அப்துல் பைத்தாக் எல்.சி.சி.யை தவறுதலாக மெக்சிகோவின் ஜனாதிபதி என்று ஜோபைடன் குறிப்பிட்டார். இது சமூக ஊடகங்களில் பெரும் வைரலானது. 

அமெரிக்க குடியரசுக் கட்சியினர் ஜோபைடன் மறதி காரணமாக அடிக்கடி நினைவு இழக்கிறார் என்பதற்கான சமீபத்திய ஆதாரமாக அந்த வைரல் வீடியோவை மேற்கோள் காட்டி மக்களிடம் பரப்ப முயற்சித்து வருகிறார்கள். 

86-வயதாகும் ஜோபைடன் உலக தலைவர்களின் பெயர்கள் குறித்து தற்போது 3-வது முறையாக தவறுதலாக உளறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து