முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த சூழலிலும் மக்கள் நல திட்டங்களை தி.மு.க. அரசு தொய்வின்றி செயல்படுத்தும் : டுவிட்டரில் அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2024      தமிழகம்
Udayanidhi-1 2023-10-15

Source: provided

கோவை : எந்த சூழலிலும் மக்கள் நலனுக்கான திட்டங்களை தி.மு.க.  அரசு தொய்வின்றி செயல்படுத்தும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

தொலைநோக்குத் திட்டங்களை நகரங்கள் முதல் கிராமங்கள் வரை சீராக செயல்படுத்துவதில் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுவது நம் திராவிட மாடல் அரசு. அந்த வகையில், தமிழகத்தின்  மிகப்பெரும் தொழில் நகரமான கோவையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மாநகராட்சி எல்லைக்குள் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.780 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள பில்லூர் - 3 குடிநீர் திட்டம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், கோவை மாநகராட்சியின் புதிய மாஸ்டர் பிளான் தொடர்பாக இணையவழி கருத்து கேட்பிற்கான கியூ.ஆர். கோடு  பயன்பாட்டை தொடங்கி வைத்திருக்கிறோம். அதைத்தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் - தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் - பொதுப்பணித்துறை - வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் ரூ.639 கோடி மதிப்பீட்டில், நிறைவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து - நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.   

கோவையின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. எந்த சூழலிலும் மக்கள் நலனுக்கான திட்டங்களை  தி.மு.க. அரசு தொய்வின்றி செயல்படுத்தும் என்று அந்த பதிவில்  அவர் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து