முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாக்கியில் ஸ்பெயினை வீழ்த்தியது இந்தியா

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2024      விளையாட்டு
Indian-team 2024-02-06

Source: provided

புவனேஷ்வர் : சர்வதேச ஹாக்கி சம்மேளத்தின் புரோ ஹாக்கி லீக் தொடரில் புவனேஷ்வரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதின. 7-வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னரை கோலாக மாற்றினார்.

தொடர்ந்து 20-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக்கை ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றி அசத்த இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது. 24-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஜுக்ராஜ் சிங் கோலாக மாற்ற முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என வலுவான முன்னிலையில் இருந்தது.

34-வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் கோலை அடித்தது. அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி ஸ்டிரோக்கில் கேப்டன் மிரல்ஸ் மார்க் கோல் அடித்தார்.

50-வது நிமிடத்தில் இந்திய அணியின் லலித் குமார் உபாத்யாயா பீல்டு கோல் அடித்து அசத்தினார். முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து