முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலியில் ஆற்று பாலத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 31 பேர் பலி

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      உலகம்
Mali-Bus 2023-02-28

Source: provided

மாலி : மாலியில் ஆற்றுப் பாலத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 31 பேர்  உயிரிழந்தனர். 

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மாலி. மாலியில் இருந்து பர்கினா பாசோவிற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். 

பமாகோவின் தெற்குப் பகுதியான கோமாண்டூ அருகே பேருந்து ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை இடித்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஆப்பிரிக்காவில் சாலை விபத்து அதிக அளவில் நடப்பது சகஜமாக  உள்ளது. பொது போக்குவரத்து பேருந்துகளில் அளவுக்கு அதிகமான அளவில் மக்கள் பயணம் செய்வது, முறைப்படுத்துவதில் குறைபாடு ஆகியவை பேருந்து விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

மாலியில் கடந்த 19-ம் தேதி பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 46-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஐ.நா. தரவுகளின்படி உலக அளவில் உள்ள வாகனங்களில் எண்ணிக்கையில் 2 சதவீதம் மட்டுமே ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளன. ஆனால், உலகளவில் நடைபெறும் விபத்துகளில் நான்கில் ஒரு பகுதி ஆப்பிரிக்காவில் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து