முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் விலை உயர்வில் தங்கம்: பவுனுக்கு மேலும் ரூ.120 உயர்வு

வெள்ளிக்கிழமை, 8 மார்ச் 2024      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 4 நாள்களாக தொடா்ந்து உயா்ந்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பவுனுக்கு மேலும் ரூ.120 உயா்ந்து ரூ.48,840-க்கு விற்பனையானது. இந்த விலை உயா்வால், இதுவரை இல்லாத அதிகபட்ச விலையை தங்கம் எட்டியுள்ளது.

ஒரு கிராம் தங்கம் ரூ.6,000-ஐ கடந்து செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தில் விற்பனையானது. அதைத்தொடா்ந்து புதன்கிழமை நிலவரப்படி, தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயா்ந்த நிலையில் வியாழக்கிழமை மீண்டும் பவுனுக்கு ரூ.400 உயா்ந்தது. நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் பவுனுக்கு ரூ.120 உயா்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக கடந்த 8 நாள்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,320 வரை உயா்ந்துள்ளது.

சென்னையில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயா்ந்து ரூ.6,105-க்கும், பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.48,840-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.50 காசுகள் உயா்ந்து கிராம் ரூ.79-க்கும் , ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.500 உயா்ந்து ரூ.79,000-க்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து