முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      உலகம்
Pak 2024-03-18

Source: provided

பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தெற்கு வஜிரிஸ்தான் பழங்குடியினர் மாவட்டத்தின் ரக்ஸாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிந்தனர். இந்த சம்பவத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அவர்களை மேல் சிகிச்சைக்காக மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் முதல்வர் அலி அமீன் கந்தாபூர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்தவதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் நிவாரணம் மற்றும் உதவி வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து