முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      தமிழகம்
eps

Source: provided

சென்னை : தமிழகத்தில் போதை பொருள்  புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, 

இரண்டாயிரம் கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தங்கள் கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித பதிலோ, மறுப்போ நேரடியாக தெரிவிக்காத தமிழக முதல்வர், பிரச்சனைகளை திசை திருப்பும் விதமாக அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்ற பொய் பரப்புரையை தனது சுற்றுப்பயணத்தின் போதும், ஊடக விளம்பரங்கள் மூலமும் கட்டவிழ்த்து விடுவது எள்ளி நகையாடக்கூடியதாக இருக்கிறது.

அ.தி.மு.க. நடத்தி வரும் போதைப்பொருள் இல்லாத தமிழகம்' என்ற உன்னதப் போராட்டங்களுக்கு மாபெரும் ஆதரவு அளித்து வரும் தமிழக மக்கள், தமிழகத்தை போதைப் பொருள் கேந்திரமாக மாற்றிய இந்த தி.மு.க. அரசுக்கு வரும் பாராளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து