முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காடுவெட்டி விமர்சனம்

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      சினிமா
Kaduvetti-Review 2024-03-18

Source: provided

கதையின் நாயகன் ஆர்.கே.சுரேஷ், ”பெண்ணை தொட்டா வந்து நிற்பேண்டா...” என்று சொல்லிக்கொண்டு அடிதடியில் ஈடுபடுகிறார், ஊர் மக்களுக்கு உதவி செய்கிறார், காதல் தொல்லை கொடுக்கும் இளைஞர்களை வெட்டச் சொல்லி பெண்களிடம் அருவாள் கொடுக்கிறார், அரசியல் தலைவருடன் இணைந்து போராட்டம், ஆர்பாட்டத்தில் ஈடுபடுகிறார், அவ்வபோது சிறைக்கு செல்கிறார், திரும்பி வந்து கொலைகள் செய்துவிட்டு மீண்டும் சிறைக்கு செல்கிறார்.

இதற்கிடையே, தெருக்கூத்து கலைஞரான சுப்பிரமணிய சிவாவின் மகள் வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவரை காதலித்துவிட்டதால், அவரை ஊர் வழக்கப்படி கொலை செய்துவிடுமாறும், இல்லை என்றால் அவள் தனக்கு பிறக்கவில்லை என்று சொல்லுமாறும், பஞ்சாயத்து வற்புறுத்துகிறது. பஞ்சாயாத்துக்கு கட்டுப்பட்டு பெற்ற மகளை கொலை செய்தாரா?, “பெண்ணை தொட்டா வருவேன்...” என்று சொல்லும் ஆர்.கே.சுரேஷ், இந்த பெண் விசயத்தில் என்ன செய்தார்? என்பது தான் ‘காடுவெட்டி’ படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடித்து தன்னை நல்ல நடிகராக அடையாளப்படுத்திக் கொண்டார்

தெருக்கூத்து கலைஞராக நடித்திருக்கும் சுப்பிரமணி சிவா, சாதி பெருமை பேசும் மக்களால், பெற்ற பிள்ளைகளை பறிகொடுக்கும் பெற்றோர்களை பிரதிபலிக்கும் வேடத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்.

வணக்கம் தமிழா சாதிக்கின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அருமை. வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் காதலித்தால் அதை நாடக காதல் என்று சொல்பவர்கள், அதற்கான விளக்கத்தை விரிவாகவும், தெளிவாகவும் சொல்லியிருக்கலாம்.

மொத்தத்தில், இந்த ‘காடுவெட்டி’ தன் சமூகத்தின் பெருமை என கனவு காண்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து