முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோமியோ இசை வெளியீடு

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      சினிமா
Romeo-Music 2024-03-18

Source: provided

அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ரோமியோ’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, தலைவாசல் விஜய், விடிவி கணேஷ், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் இப்படம் ரம்ஜான் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 

இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, “இந்த மேடையே சந்தோஷமாக உள்ளது. விநாயக் போன்ற திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி. மிருணாளினி தன்மையான நல்ல பொண்ணு. படத்தை புரோமோட் பண்ண எங்களை பத்தி கிசுகிசு கிரியேட் பண்ணலாமா என யோசித்தோம். ஆனால், எதுவுமே வொர்க்கவுட் ஆகவில்லை. முதன் முறையாக ஒரு காதல் படத்தில் நடித்துள்ளேன். ஒரு பெண் எப்படி ஆணை கொடுமைப்படுத்துகிறாள், ஆண் சமூகம் எப்படி இதை பொறுத்துக் கொள்கிறது என்பதுதான் கதை. குடும்பத்தோடு நிச்சயம் படத்தைப் பார்க்கலாம்.” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து