முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேமலு விமர்சனம்

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      சினிமா
Premalu-Review 2024-03-18

Source: provided

கல்லூரியில் படிக்கும் நாயகன் சக மாணவியை ஒருதலையாக காதலிக்கிறார். அந்த காதல் தோல்வியில் முடிய, அந்த சோகத்தில் இருந்து வெளியேற படிப்பு முடிந்து லண்டன் போக முயற்சிக்கிறார். அதுவும் தோல்வியில் முடிகிறது. இதனால், தனது நண்பருடன் ஐதராபாத்துக்கு செல்கிறார். அங்கு ஒரு திருமண நிகழ்வில் நாயகி மமீதா பைஜுவை சந்திக்க அவர் மீதும் நஸ்லெனுக்கு காதல் பிறக்கிறது. அதனால் சென்னைக்கு போக நினைத்த நாயகன், காதலுக்காக ஐதராபாத்திலேயே தங்கி விடுகிறார். 

தனது காதலை நாயகியின் தோழியிடம் நஸ்லென் தெரிவிக்க, அவரோ ”மமீதா பைஜு எதிர்ப்பார்க்கும் எந்த தகுதியும் உன்னிடம் இல்லை, அதனால் உன் காதலை அவர் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்”, என்பதோடு, அலுவலக நண்பரான ஷ்யாம் மோகனும், மமீதாவும் உறவில் இருப்பதாகவும் சொல்கிறார். இதனை கேட்ட பிறகும் மமீதா பைஜு மீது காதல் கொண்டு அவருடன் பயணிக்கும் நஸ்லெனின் காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை கலகலப்பாக சொல்வது தான் ‘பிரேமலு’.

மலையாளப் படம் என்றாலும், கதை ஐதராபாத்தில் நடப்பதால் ‘பிரேமலு’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். ஐதராபாத்தில் கதை நடந்தாலும், அது தென்னிந்தியா முழுவதும் பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதை, மலையாளத் திரைப்படத்தின் அடையாளத்தை மறைத்திருப்பதோடு, வழக்கமான காதல் கதை என்பதை மறந்து, ரசிகர்கள் சிரித்து ரசிக்கும்படியும் செய்திருக்கிறது.

கிரண் ஜோஷியுடன் இணைந்து கதை திரைக்கதை எழுதியிருக்கும் இயக்குநர் கிரிஷ் ஏ.டி, திருப்பங்கள் இல்லாமல் மிக சாதாரணமாக கதையை நகர்த்தி சென்றாலும், சச்சின் மற்றும் ரீனு என்ற இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு இளைஞர்கள் கொண்டாடும் ஜாலியான காதல் படத்தை கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘பிரேமலு’ குடும்பத்துடன் சென்று குதூகலமாக கொண்டாடலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து