முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமி விமர்சனம்

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      சினிமா
Kami-Review 2024-03-18

Source: provided

நாயகன் விஷ்வக் சென்னின் தேகம் மீது மனிதர்கள் லேசாக தொட்டால் கூட அவருக்கு மின்சாரம் தாக்கியது போன்ற உணர்வு ஏற்படுவதோடு, உடலில் மாற்றம் ஏற்பட்டு சுயநினைவின்றி சில மணி நேரங்கள் செயலற்று போய் விடுவார். தனக்குள் இருக்கும் இத்தகைய பாதிப்பில் இருந்து மீள்வதற்காக வைத்தியர் ஒருவரை அவர் அணுகிறார். ஆனால், இப்படிப்பட்ட பாதிப்பை குணப்படுத்த தன்னிடம் மருந்து இல்லை என்று கூறும் அந்த வைத்தியர், இதை குணப்படுத்தக் கூடிய அரியவகை காளான் ஒன்று இமயமலைப் பகுதியில் இருப்பதாகவும், 36 வருடங்களுக்கு ஒரு முறை வளரும் இந்த காளான் வளர்ந்த 24 மணி நேரத்தில் அழிந்துவிடும் என்றும் கூறுகிறார்.

அதன்படி, அந்த அதிசய காளான் குறித்து பல வருடங்களாக ஆய்வு மேற்கொள்ளும் மருத்துவர் சாந்தினி செளத்ரியுடன் சேர்ந்து, காளானை எடுப்பதற்காக நாயகன் விஷ்வக் சென், ஆபத்து நிறைந்த இமயமலைப் பகுதிக்கு பயணப்படுகிறார். இதற்கிடையே, அவரது நினைவுகளில், ஆபத்தில் இருக்கும் சிறுவன் தன்னை காப்பாற்றுமாறு சொல்வது போலவும், சிறுமி ஒருவரும் அடிக்கடி வருகிறார்கள். அவர்கள் யார்? எதற்காக தன் நினைவுகளில் வருகிறார்கள்? என்ற குழப்பத்தோடு தனது பயணத்தை தொடர, அங்கு பல்வேறு ஆபத்துகளையும் நாயகன் சந்திக்கிறார். அந்த ஆபத்துக்களை கடந்து காளானை அவர் எடுத்தாரா? இல்லையா? என்பது ஒரு பக்கம் இருக்க, அவரது நினைவில் வரும் அந்த சிறுவனும், சிறுமியும் வெவ்வேறு ஆபத்துகளில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள்.

காசியில் சுற்றித்திரியும் நாயகன் விஷ்வக் சென் யார்?, அவருக்கும் ஆபத்தில் சிக்கித்தவிக்கும் சிறுவன் மற்றும் சிறுமிக்கும் என்ன தொடர்பு? என்பதை இதுவரை இந்திய சினிமாவில் இப்படி ஒரு விசயத்தை சொல்லியிருப்பார்களா? என்ற கேள்வியை எழுப்பும் ஒரு கருப்பொருளோடு சொல்வது தான் ’காமி’

மூன்று கதைகளிலும், மூன்று விதமான உணர்வுகளை வெளிப்படுத்தி ரசிகர்களை படத்தோடு ஒன்றிவிட செய்துவிடும் இயக்குநர் வித்யாதர் ககிடா, மருத்துவ குனம் கொண்ட காளானை மையமாக வைத்துக்கொண்டு அறிவியல் தொடர்பான கதை சொல்லாமல் ஆன்மீக தொடர்பான கதை சொல்வது சற்று நெருடலாக இருந்தாலும், காட்சி மொழி மூலம் அவர் சொல்லியிருக்கும் விசயங்களை, தாய்மொழி கடந்து ரசிக்க முடிகிறது. 

மொத்தத்தில், சிறு குறைகள் இருந்தாலும், இந்த ‘காமி’ திரைப்படம் மத உணர்வுகளைத் தாண்டி நல்லதோர் பொழுதுபோக்கு திரைப்படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து