முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      தமிழகம்
OPS 2022 12 29

Source: provided

சென்னை : அ.தி.மு.க. கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரி அக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில்,  “அ.தி.மு.க.வின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி,  அறிக்கைகள் வெளியிடுவது,  கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். எனவே,  அ.தி.மு.க. கட்சியின் பெயர்,  சின்னம்,  கொடியை அவரும், அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் நேற்று (மார்ச் 18) சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், அ.தி.மு.க. சின்னம், பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு விதித்த நிரந்தர தடையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து