முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      தமிழகம்
Zafar-Sadiq 2024-03-02

Source: provided

சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.

டெல்லியில் கடந்த மாதம், ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் சிக்கிய விவகாரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டு இருப்பது தெரிய வந்தது. ஜாபர் சாதிக் இதுவரை ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 500 கிலோ ‘சூடோபெட்ரின்’ என்ற போதைப்பொருள் தயாரிப்பு வேதிப்பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தி இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.  அவரிடம் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக டெல்லியில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.  இந்த நிலையில்,  டெல்லியில் விசாரணை முடிந்து விமானம் மூலம் ஜாபர் சாதிக் நேற்று சென்னை அழைத்துவரப்பட்டார். சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கிடம் தொடந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு சென்றுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து