முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் நடக்கவிருக்கும் சி.எஸ்.கே. - ஆர்.சி.பி. போட்டிக்கான டிக்கெட் சில நிமிடங்களில் விற்றன

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      விளையாட்டு
CSK 2024-03-11

Source: provided

சென்னை : சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடக்க போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைனில் தொடங்கியவுடன் விற்று தீர்ந்தன.

முதல் போட்டியில்...

ஐபிஎல் 2024 சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாட உள்ளனர். சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும்நிலையில், லண்டனில் இருந்து இந்தியா திரும்பியுள்ள விராட் கோலி விரைவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்.

ஆன்லைன் மூலம்... 

இந்தப் போட்டிக்கான டிக்கெட் நேற்று ஆன்லைன் மூலம் விற்கப்பட்டது. கடந்த முறை நேரடியாக விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அதிகப்படியான கூட்டம் காரணமாக நிறைய சிக்கல்கள் எழுந்தன. அதனை தடுக்கும்பொருட்டு ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை நடந்தது. எனினும், தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்தன.

நம்ப முடியாத... 

இந்நிலையில், இந்திய வீரர் அஸ்வின், "சேப்பாக்கத்தில் தொடங்கும் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட்டுக்கு நம்ப முடியாத அளவுக்கு டிமாண்ட் உள்ளது. எனது குழந்தைகள் இருவரும் தொடக்க விழா மற்றும் போட்டியை பார்க்க விரும்புகிறார்கள். சென்னை அணி நிர்வாகம் உதவி செய்யவும்" என்று பதிவிட்டுள்ளார்.

கடைசி சீசன்...

டோனிக்கு இது கடைசி சீசன் என்று பேசப்படுகிறது. அதேபோல், விராட் கோலி கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் விளையாடவில்லை. இரண்டாவது குழந்தை பிறந்த பின் ஐபிஎல் மூலமே விளையாட உள்ளார். இதுபோன்ற காரணங்களால் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டிக்கு அதிகளவு வரவேற்பு காணப்படுகிறது.

ரசிகர்கள் ஆத்திரம்

போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நேற்று தொடங்கிய நிலையில், விராட் கோலி மற்றும் டோனி ஆகியோரை ஒரே போட்டியில் காண இரு அணி ரசிகர்களும் டிக்கெட் வாங்க முற்பட்டதால் இணையதளம் முடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் சென்னை அணி நிர்வாகத்தை திட்டி தீர்த்தனர்.  இதையடுத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் முடங்கியதற்கு பேடிஎம் இன்சைடர் மன்னிப்பு கோரியுள்ளது. “சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான ஐபிஎல் தொடக்கப் போட்டிக்கு அமோக வரவேற்பு அளித்ததற்கு நன்றி. துரதிர்ஷ்டவசமாக, எதிர்பாராதவிதமாக எழுந்த தொழில்நுட்ப சிக்கல் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கும். இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து