முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசிலில் சுட்டெரிக்கும் வெப்பம்: கடற்கரைகளில் தஞ்சம் அடையும் பொதுமக்கள்

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2024      உலகம்
Brazil 2024-03-19

ரியோ டி ஜெனிரோ, பிரேசிலில் கடும் வெப்பம் வாட்டி வதைப்பதால் உஷ்ணத்தை தணிக்க கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

பிரேசில் நாட்டில் கடும் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 62.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. 

இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பம் ஆகும். வரும் நாட்களிலும் இதே நிலை காணப்படும் என்பதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளடனர்.  உஷ்ணத்தை தணிப்பதற்காகவும், இதமான காற்று வாங்குவதற்காகவும் பொதுமக்கள் நீர் நிலைகள் அருகேயும் கடற்கரைகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். 

குறிப்பாக, ஐபனிமா மற்றும் கோபகபனா கடற்கரைகள் மக்களால் நிரம்பி வழிகின்றன. மக்கள் தொகை அதிகரித்து வருவதாலும், குடியிருப்புகளுக்காக காடுகளை அழிப்பது தொடர்வதாலும் வெப்ப அலையானது இன்னும் மோசமாகும் என காலநிலை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து