முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிராக் பஸ்வானுடன் பா.ஜ.க. கூட்டணி: அதிருப்தியால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பசுபதி பராஸ்

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2024      இந்தியா
Pashupati-Paras 2024-03-19

பாட்னா, பீகார் மாநிலத்தில் ராம் விலாஸ் பஸ்வான் மகன் கட்சியுடன் பா.ஜ கூட்டணி அமைத்துள்ளது. இதனால் மத்திய அமைச்சராக இருக்கும் பசுபதி பராஸ் கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் அவர் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2019 மக்களவை தேர்தலின் போது பீகாரில் ராம்விலாஸ் பஸ்வானின் ராஷ்டிரிய லோக் தளம் பா.ஜ.க. கூட்டணியில் இருந்தது. அப்போது அவர் மத்திய அமைச்சராக இருந்தார். அவர் மறைவுக்குப்பின், அவரது சகோதரர் பசுபதி பராஸ் கட்சியை பிரித்து தனியாக செயல்பட்டார். அவருக்கு பா.ஜ.க. மத்திய அமைச்சர் பதவியும் வழங்கியது.

ஆனால், தற்போது பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பராக் பஸ்வானை (லோக் ஜனசக்தி) சேர்த்துக் கொண்டது. இதனால் பசுபதி பராஸ் கடும் அதிருப்தி அடைந்து தனது மத்திய அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  

பதவியை ராஜினாமா செய்தது குறித்து பசுபதி பராஸ் கூறுகையில், நேற்று முன்தினம்தேசிய ஜனநாயக கூட்டணி 40 இடங்களுக்கு தொகுதி பங்கீடு குறித்து அறிவித்தது. எங்களுடைய கட்சி ஐந்து எம்.பி.க்களை கொண்டுள்ளது. நான் மிகுந்த நேர்மையுடன் பணியாற்றினேன். எங்களுக்கும் எங்கள் கட்சிக்கும் அநீதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து