முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாட் ஸ்பாட் டிரைலர் வெளியீடு

திங்கட்கிழமை, 25 மார்ச் 2024      சினிமா
Hot-Spot-trailer 2024-03-25

Source: provided

முழுப்படமும் பார்த்தால் உங்களுக்கு இதன் அர்த்தம் புரியும்” - விளக்கமளித்த ‘ஹாட் ஸ்பாட்’ படக்குழு!

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக மலையாள திரைப்படங்கள் பற்றிய பேச்சுகள் அடிப்பட்டிக்கொண்டிருந்த நிலையில், தற்போது அந்த நிலை மாறியிருக்கிறது. அதற்கு காரணம் ‘ஹாட் ஸ்பாட்’ என்ற தமிழ் படத்தின் டிரைலர் தான். 

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களை பேசும் திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘ஹாட் ஸ்பாட்’ படத்தில் கலையரசன், ஆதித்யா பாஸ்கர், மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கே.ஜே.பி. டாக்கீஸ் மற்றும் 7 வாரியர் பிலிம்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே.ஜே.பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியதோடு, தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. குறிப்பாக ஆண், பெண் உறவு குறித்து படத்தில் பேசப்பட்ட வசனங்கள் ஆபாசமாக இருப்பதாக பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர், 

இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்து கொள்ள, டிரைலரில் இடம்பெற்ற ஆபாச வசனங்கள் மற்றும் ஆண், பெண் உறவு குறித்து இடம்பெற்ற வசனங்கள் பற்றி பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.

அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாக விளக்களித்த படக்குழுவினர், ”தப்பான கருத்தை சொல்லி விடக்கூடாது என்பதில் மிக கவனமுடன் வேலை பார்த்துள்ளோம்” என்று தெரிவித்ததோடு, ”டிரைலர் பார்க்கும் போது உங்களுக்கு படத்தின் மீது தவறான எண்ணம் ஏற்படும், ஆனால் படம் அப்படி இருக்கது. முழுப்படமும் பார்த்தால் உங்களுக்கு இதன் அர்த்தம் புரியும்.” என்று விளக்கமளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து