முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்

புதன்கிழமை, 27 மார்ச் 2024      தமிழகம்
Weather-Center 1

Source: provided

சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். வரும் 01 மற்றும் 02-ம் தேதிகளில் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து