முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?

வியாழக்கிழமை, 28 மார்ச் 2024      தமிழகம்
Selvaganapathy

சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது.  இதையடுத்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. 

இந்நிலையில்,  சேலம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் டி.எம்.செல்வகணபதியின் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் மேற்கு மற்றும் வடக்கு சட்டமன்ற தொகுதி என 2 இடங்களில் வாக்கு இருப்பதால்,  செல்வகணபதியின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என அதி.மு.க. சார்பாக புகார் எழுந்த நிலையில்,  அவரது வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து,  தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுடுகாடு கொட்டகை ஊழலில் தண்டனை பெற்று,  பின்னர் அதிலிருந்து விடுதலை ஆனது, கலர் தொலைக்காட்சி ஊழலில் தண்டனை பெற்று அதிலிருந்து விடுதலை ஆனது தொடர்பான ஆவணங்களை செல்வகணபதி சமர்ப்பிக்கவில்லை என்று கூறி,  மேலும் ஒரு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால், செல்வகணவதியின் வேட்புமனு ஏற்கப்படுமா என்ற கேள்வி நிலவி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து