முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்தை கடந்தது: வரலாறு காணாத அளவு உயர்ந்தது தங்கம் விலை : தொடர் விலை உயர்வால் பொதுமக்கள் - சாமானியர்கள் அதிர்ச்சி

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      தமிழகம்
Gold 2022-12-31

Source: provided

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.1120 அதிகரித்து ரூ.51,120-க்கு விற்பனையானது.

தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

அந்த வகையில்,  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,250-க்கும்,  சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50,000-க்கு விற்பனையானது.

இந்நிலையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 140 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,390-க்கும்,  சவரனுக்கு ரூ.1120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,120-க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் முதன்முறையாக ரூ. 50,000ஐ கடந்து விற்பனையானது. இந்நிலையில்,  புதிய உச்சத்தை அடைந்ததால், தங்கம் வாங்குவோரிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பொதுமக்கள், சாமனியர்கள் தொடர் விலை உயர்வால் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து