முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2024      தமிழகம்
School-students 2024-03-29

Source: provided

சென்னை : கோவையில் பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரத்தில் ஏப்.3ம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் அண்மையில் நடைபெற்ற பிரதமரின் வாகன பிரசார நிகழ்ச்சியின்போது சாய்பாபா காலனி பகுதியில் பிரதமரை வரவேற்க அதே பகுதியை சேர்ந்த தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த கல்வித் துறை அதிகாரிகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டார். இதையடுத்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழு அதிகாரிகள் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் மீது சாய்பாபா காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, தனியார் பள்ளி தலைமை ஆசிரியை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், மனு மீது ஏப்.3ம் தேதிக்குள் பதிலளிக்க, சாய்பாபா காலனி காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் அதுவரை பள்ளி மீது நடவடிக்கை கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து